தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர், அதன் தலைவர் ஆர். விஜய் சரவணன் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நவம்பர் 26-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்.
அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் ஆர். விஜய் சரவணன் (தஞ்சாவூர்) தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடை பெறவுள்ள இந்த ஆய்வில், குழு உறுப்பினர்களான கா. அண்ணாதுரை (பட்டுக் கோட்டை), கா. கருணாநிதி (கோவில்பட்டி), ஆ. குட்டி என்ற சுதாகர் (வால்பாறை), ஈ.சி. கோவிந்தராசன் (பர்கூர்), டி. சண்முகன் (மொடக்குறிச்சி), சதீஷ் கிறிஸ்டோபர் (ராதாபுரம்), ந. செந்தில்குமார் (திருவொற் றியூர்), க. பாலமுருகன் (அம்பத்தூர்), தா.த. பிரவீன் (விளவங் கோடு), கு. ரவி மனோகரன் (பழனி), கே. ராம்கு மார் (பல்லடம்) ஆகி யோர் பங்கேற்க உள்ளனர்.
மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இக்கூட் டத்தில் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



