உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டான விவோ, தனது புதிய இளமை மிக்க விவோ ஒய்21 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது மெல்லிய தோற்றத்துடன் தடையில்லா தசிறந்த பயனர் அனுபவத்துடன் பல்வேறு நவீன சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் (1டிபி வரை நீட்டிக்கும் வசதி)வெளிவந்துள்ள இதன் விலை 15,490 ரூபாய் ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கார்டுடன் இதன் புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய விவோ ஒய்21 மிட்நைட் ப்ளூ மற்றும் டயமண்ட் க்ளோ ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்கள் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடாகிளிக், பஜாஜ் பின்செர்வ் இஎம்ஐ ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன்மரியா கூறியதாவது: நவீன டிசைன் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ள ஒய்21 மாடல் ஸ்மார்ட்போன், ஒய் மாடல் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது.
இப்பிரிவில் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் மெல்லிய தோற்றத்தில் ஒய்21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இளம் தலைமுறை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட் போனை விரும்புகிறார்கள் என்றார்.
சிறந்த டிஸ்பிளே உடன் கூடிய நவீன வடிவமைப்பு 8எம்எம் மெல்லிய தோற்றத்தில் 2.5டிபிளாட்பி ரேம் மற்றும் 182 கிராம் எடையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கைகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் உள்ளது.
இதில் உள்ள 16.55 செமீ எச்டி+ புல்வியூ டிஸ்பிளே சமூக ஆர்வமுள்ள பயனர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ‘மேக்இன்இந்தியா’ திட்டத்தில் விவோவின் புதிய மாடல் ஒய்21 ஸ்மார்ட் போனும் கிரேட்டர் நொய்டாவில் தயாரிக்கப்படுகிறது.



