fbpx
Homeபிற செய்திகள்ராஜீவ் காந்தி பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ராஜீவ் காந்தி பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய நிகழ் வும் காங்கிரஸ் கட்சி சார் பில் நடந்தது.

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நேற்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட் சியினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

மேலும் ரத்ததான முகாமை துவக்கி வைத் தனர். அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்கட்டமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 10 பேர் ரத்ததானம் செய்தனர்.

முன்னதாக கட்சியின் கோவை மாவட்ட அலுவ லகமான காமராஜ் பவனில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவ ட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந் துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img