தற்போது ஏற்பட்டுள்ள பருவமழை மாற்றம் இந்தியாவை மட்டும் பாதிக்கிறது என்று கருதிவிட முடியாது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியில் 24 மணி நேரத்தில் பெய்த 15 செ.மீ. மழை பொழிவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு 5 பில்லியன் யூரோ என்று கூறப்படுகிறது.
சீனாவின் எடின்செயினின் ஒரு நாளில் ஏற்பட்ட 61 செ.மீ.க்கும் அதிகமான மழை பொழிவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டபாடில்லை.
இதுபோன்ற கடுமையான மழை பொழிவும் வெள்ள பெருக்கும் வருங்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் அமைச்சகம் வளர்ச்சி பணிகளுக்காக காடுகளை அழிப்பதை ஆதரிக்கிறது.
இமய மலையானாலும், மேற்கு தொடர்ச்சி மலையானாலும் சூழலியலையோ, சுற்றுச்சூழலையோ பொருட்படுத்தாமல் சாலைகள், பாலங்கள் என்று கட்டமைப்பு வசதிகளை பெருக்கி இயற்கையை சீண்டும் போது நம்மை திருப்பி தாக்க இயற்கை கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் அடைமழையும், புயல் மழையும் போலிருக்கிறது.
பருவமழை தொடங்கி பாதி தான் முடிந்திருக்கிறது. இனிமேல் தான் புயல்களும், பெருமழையும் அதிகரிக்கும் பருவம்.
அடுத்து சில மாதங்களையும் நாம் கடந்தாக வேண்டும். பருவம் எப்போது எப்படி மாறக்கூடும் என்பதை கணிக்க முடியாத சூழலில் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தால் மட்டுமே உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் தவிர்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.



