fbpx
Homeதலையங்கம்கொரோனா எண்ணிக்கையும் ஒமைக்ரான் எண்ணிக்கையும்!

கொரோனா எண்ணிக்கையும் ஒமைக்ரான் எண்ணிக்கையும்!

கொரோனா வைரஸ் சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களைப் பாடாய்ப் படுத்தி வருகிறது. கடந்த 2021 ஏப்ரல்- மே மாதத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மட்டுப்பட்டவுடன் அந்த வைரஸ் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டது என்றே பெரும்பாலானோர் நம்பியிருந்தனர். ஆனால், 2022-லும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடரும் என்பதை ஒமைக்ரான் தொற்றுப் பரவல் உணர்த்திவிட்டது.

இந்த மாறுபாடு வெளிவரத் தொடங்கிய பிறகு, கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில், ஒமைக்ரானின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. இதுவரை இருந்தது போல, இப்போது இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஒமைக்ரானின் அறிகுறிகளாக இல்லை.

சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஒமைக்ரான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன. இருப்பினும், புதிய மாறுபாடு முந்தைய ஷிகிஸிs-சிளிக்ஷி-2 விகாரங்களைப் போல் இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில் இது ஒப்பீட்டளவில் லேசானது மற்றும் நிர்வகிக்கக்கூடியது. ஒமைக்ரான் மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது குளிர் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது மற்றும் நுரையீரலுக்கு குறைவான சேதத்தை ஏற்படுத்துகிறது.

புதிய கோவிட் மாறுபாடு ஒரு பொதுவான சளி அல்லது காய்ச்சலை ஒத்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரானை 14 அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். அவை வருமாறு:-

மூக்கு ஒழுகுதல்: 73%, தலைவலி: 68%, சோர்வு: 64%, தும்மல்: 60%, தொண்டை புண்: 60%,- தொடர் இருமல்: 44%, கரகரப்பான குரல்: 36%, குளிர் அல்லது நடுக்கம்: 30%, காய்ச்சல்: 29%, தலைச்சுற்றல்: 28%, மூளை மூடுபனி: 24%, தசை வலிகள்: 23%, வாசனை இழப்பு: 19%, மார்பு வலி: 19%.
ஜனவரி 17-ம் தேதி வரை இந்தியாவில் ஒமைக்ரான் வேற்றுருவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,209 என்று மத்திய அரசு கூறுகிறது.

அதே நேரம், ஒருநாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் 80-&85% பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால், ஒமைக்ரான் வேற்றுருவம் குறித்துத் தனியாகப் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டோம் என்கிறார் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்படியானால், சென்னையில் மட்டுமே தினசரி 7,000-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொருள்.

ஆனால், தேசிய அளவில் ஒட்டுமொத்தமாகவே 8,000 பேர் மட்டுமே ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். இரண்டில் எது உண்மை?

எது எப்படியோ, கொரோனா வைரஸ் உலகுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பாடங்களைக் கற்பித்துவருகிறது. அதற்கேற்ப விழித்துக்கொண்டு செயல்பட்டால்தான் எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளைச் சிறப்பாகத் தடுக்கவும் கையாளவும் முடியும்.

கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதைத் தவிர இச்சமூகத்திற்கு வேறு வழியில்லை போலும்!

படிக்க வேண்டும்

spot_img