fbpx
Homeதலையங்கம்குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு!

குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு!

கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்கது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப் பட்டள்ளதாக மண்டல கூட்டத்தில் தலைவர் மீனா லோகு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் மீனா லோகு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல், பாதாள சாக்கடை திட்டம், ஸ்மா£ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அடிப்படை வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றுவது தொடர்பாக 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு வருடத்திற்கு தனியார் எப்படி குப்பைகளை அகற்றுகிறார்கள் என்று பார்த்துவிட்டு பின்னர் அடுத்த ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.
குப்பைகளை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு சிறந்தது!

படிக்க வேண்டும்

spot_img