fbpx
Homeபிற செய்திகள்ஹெச்.என்.ஐ. வெல்த் துறையில் ஃபிஸ்டம்

ஹெச்.என்.ஐ. வெல்த் துறையில் ஃபிஸ்டம்

ஃபிஸ்டம் பிரைவேட் வெல்த்[‘Fisdom Private Wealth’] எனும் நிறுவனத்தை தொடங்குவதாக இந்தியாவின் முன்னணி வெல்த் டெக் (wealth-tech) அறிவித்துள்ளது. இதன்மூலம் ஹெச்என்ஐ வெல்த் துறையில் அடியெடுத்து வைக்கிறது.

முன்னணி முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக தொழில் நுட்பம் அடிப்படையிலான நிதி மற்றும் சொத்து மேலாண்மை துறையில் நுழைகிறது.

ஃபிஸ்டம் பிரைவேட் வெல்த் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அபிஜித்பாவே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபிஸ்டம் பிரைவேட் வெல்த் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மியூச்சுவல் பண்ட், பிஎம்கள், ஏஐஎப்கள், பட்டியலிடப்படாத தனியார் பங்குகள், கடன் பத்திரங்கள், வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், காப்பீடு மற்றும் சர்வதேச தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான முதலீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க உள்ளது.

ஃபிஸ்டம் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான எஸ்.வி. சுப்ரமண்யா கூறியதாவது: பிரைவேட் வெல்த் பிரிவில் புதிய நிறுவனத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது மிகப் பெரிய முன்னெடுப்பு உத்திகளில் ஒன்றாக ஃபிஸ்டம் பிரைவேட் வெல்த் நிறுவனத்துடன் இணைந்து முன்னணி முதலீட்டாளர்கள் அவர்களது நிதி மேலாண்மை பயணத்தில் புதிய அனுபவங்களை வழங்குவதே எங்களது குறிக்கோளாகும்.

ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பான தொழில்நுட்ப உள்கட்டுமானத்தின் வாயிலாக, ஆய்வுப் பூர்வமான தகுதி வாய்ந்த மிகவும் தனிச்சிறப்பான நிதி மேலாண்மை சேவைகளை வழங்க நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றார்.

ஃபிஸ்டம் பிரைவேட்வெல்த், தலைமை செயல் அதிகாரி அபிஜித்பாவே கூறியதாவது :ஃபிஸ்டம் போன்ற மிகவும் ஆற்றல் மிக்க நிறுவனத்துடன் எனது புதிய பயணத்தை தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

பிரைவேட் வெல்த் பிரிவில் ஒப்பீட்டளவில், குறிப்பாக இந்தியாவில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளடங்கிய சந்தையை கொண்டுள்ளது, தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட நமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டு சேர்க்க இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆகவே உள்நாட்டு சந்தைகளில் இணைக்கப்படாத உயர் வகுப்பு வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கி ஃபிஸ்டம் பிரைவேட் வெல்த் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img