fbpx
Homeபிற செய்திகள்எதிர்கால தொழில்நுட்பங்களில் மாற்றத்தை காணும் வால்வோலின்

எதிர்கால தொழில்நுட்பங்களில் மாற்றத்தை காணும் வால்வோலின்

பைக் எக்ஸ்பர்ட் மற்றும் ட்ரக் எக்ஸ்பர்ட் எனும் நிபுணத்துவ சேவை திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது வால்வோலின் கம்மின்ஸ் பிரைவேட் லிமிடெட். இந்த திட்டங்கள் சுதந்திரமான மெக்கானிக் பணிமனைகள் மற்றும் சேவை வழங்குநர்களின் குழுவை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் திறமையானவர்களாக அவர்களை ஆக்க உதவுகின்றன.

150 வருட நம்பிக்கை பெற்ற வால்வோலின் அதன் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உயர் முக்கியத்துவத்தை எப்போதுமே வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் துவக்கம் அதன் முயற்சிகளை வலுப்படுத்தும் அடுத்த நிலையாகும்.

இதுகுறித்து வால்வோலின் கம்மின்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் சந்தீப்கலியா பேசியதாவது: ஒருதலை சிறந்த முன்னணி நிறுவனமாக, உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயல் திறன் மற்றும் தரத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.

பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய பணிமனைகளுடனான எங்கள் தொடர்பு, வால்வோலினுடன் வளர்வதை நம்பும் மெக்கானிக்குகளின் வலையமைப்பை உருவாக்க உதவும், என்றார்.

பைக் எக்ஸ்பெர்ட் பணிமனைகள் இரு சக்கர வாகன ஆர்வலர்கள் மற்றும் மெக்கானிக்குகளுக்கு சிறந்த தீர்வுகளின் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பராமரிப்பு மற்றும் பழுதுகள் தவிர, சேவைகளை சரியான நேரத்தில் நினைவூட்டல் மற்றும் கடந்த கால வாகன வரலாற்றின் அடிப்படையிலான நன்மைகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

எனவே, நுகர்வோர் தங்கள் வாகனங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வால்வோலின் ஆட்டோமோட்டிவ் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தப்போவது உறுதி.

லாரிகள் வழக்கமாக வரும் பணிமனைகளுக்கான ட்ரக் எக்ஸ்பர்ட் திட்டம், எதிர்கால இன்ஜின் தொழில்நுட்பங்கள் மற்றும் டிரக்குகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பது பற்றிய விரிவான பயிற்சி பற்றி அறிய பணிமனை பங்குதாரர்களுக்கு உதவும்.

படிக்க வேண்டும்

spot_img