fbpx
Homeபிற செய்திகள்எல்இடி வர்த்தகத்தை மையப்படுத்தி ‘லவ் அட் பர்ஸ்ட் லைட்’ பிரச்சாரம்

எல்இடி வர்த்தகத்தை மையப்படுத்தி ‘லவ் அட் பர்ஸ்ட் லைட்’ பிரச்சாரம்

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக்கல் சாதன உற்பத்தி நிறுவனமான பாலிகேப் இந்தியா லிட்., முதன்முறையாக தனித்தன்மை கொண்ட லவ் அட் பர்ஸ்ட் லைட் பிரச்சாரத்தை தொடங்குகிறது.

பாலிகேப் இந்தியா நிறுவனம் பல்வேறுபட்ட எல்இடி லைட் பல்புகள், எல்இடி பேட்டன், பேனல்கள், ஸ்பாட் லைட்கள் ஆகியவற்றை சலுகை விலையில் அளிக்கிறது. ரோஷன்-ரோஷிணி என்ற கதாபாத்திரங்களின் காதல் கதையை கருப்பொருளாகக் கொண்டு இப்பிரச்சாரம் அமைக்கப்பட்டுள்ளது.

ரோஷன் எல்இடி டியூப் லைட் போலவும், ரோஷிணி எல்இடி பல்ப் போல வும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறைவான மின் பயன்பாடு, நீடித்த உழைப்பு, அதிக ஒளிரும் திறன் மற்றும் புதுமையான முறையில் நுகர்வோருக்கு கையாள எளிதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் கிடைக்கும் பயன்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

தனிசிறப்பான வகையில் இன்ஸ்டாகிராம் பில்டர் மூலமாக, புதுமையான படைப்பாக்க தகவல்களை உருவாக்கவும், வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கும் வகையிலும், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கும் வகையிலும் நுகர்வோருக்கான போட்டிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் தங்களுடைய நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள் ஆகியோரையும் பரிந்துரைத்து, அவர்களையும் வீடியோக்களை பதிவிடச்செய்து இப்போட்டியில் பங்கேற்கச் செய்வதன் மூலம் கவர்ச்சிகரமான பரிசும் பெற இயலும்.

சிறப்பான ஏற்பாட்டில், ரோஷனும் ரோஷிணியும் வானொலியில் பங்கேற்று நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்வர். அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் விரைவில் வெளியாக உள்ள குறும்படங்களில் விர்ச்சுவல் ரொ மாண்டிக் ஜோடிகளான ரோஷன்-ரோஷிணியை காணலாம்.

இந்த பிரச்சாரம் குறித்து, பாலிகேப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை அதிகாரி நிலே ஷ்மலானி கூறியதாவது: லவ் அட் பர்ஸ்ட் லைட் பிரச்சாரமானது புதுமையாகவும், படைப்பாற்றல் உடனும் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பிராண்டின் வாக்குறுதியை கொண்டு சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த லவ் அட் பர்ஸ்ட் லைட் பிரச்சாரத்தின் ஒரு பிரிவாக, கோன்பனேகா ரோஷன்-ரோஷிணி என்ற உபபிரச்சாரம், விநியோகஸ்தர்களுக்கும் சில்லறை வர்த் தகர்களுக்கும் வேடிக்கையான விளையாட்டுகளை அளிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img