fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 35 -வது கல்வியாண்டின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று (செப்.1) நடைபெற்றது.

இவ்விழாவினை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர் வாக அறங்காவலர் டி.லஷ்மி நாராயணசுவாமி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, கல்லூரியின் பாரம்பரியத்தையும், தனிச்சிறப்புகளையும் எடுத்துரைத்தார். இக்கல்லூரி கல்விப் பணியோடு சமூகசேவையிலும் விளையாட்டுத் துறையிலும் தனிகவனம் செலுத்தி வருகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், கல்லூரியில் உள்ள வசதிகள், வேலைவாய்ப்பு பெற மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்.

உலகின்தலை சிறந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்போது உயர்பதவிகளை வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

யூடியூப் மற்றும் முகநூல் வழியாக நேரலை யில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்வினை 1800 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டுகளித்தனர்.

கல்லூரி துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா வரவேற்றார். முதன்மையர் முனைவர் ஜெ.சண்முகானந்த வடிவேல் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img