fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பாராட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பாராட்டு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், கோவை குரூப் தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

கோவை குரூப் கமாண்டர் கர்னல்

சிறப்பு விருந்தினர் தேசிய மாணவர் படையின் கோவை குரூப் கமாண்டர் கர்னல் பி.வி.எஸ். ஷிவா ராவ், தேசிய மாணவர் படையின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு விளக்கினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை அலுவலர்கள், கமாண்டிங் அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கின் தொடக்க நிகழ்வாக, அகில இந்திய அளவிலான ஜி.வி. மவுலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஓபன் ரைபிள் புரோன் 50 மீட்டர் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி மாணவர் தே.நதீஷூக்கும், அகில இந்திய தல்சானிக் முகாமில் பங்கேற்றமைக்காக மாணவர் பாரத் வெற்றிவேலுக்கும், தேசிய மாணவர் படை கோவை குரூப் கமாண்டர் கர்னல் பி.வி.எஸ். ஷிவா ராவ் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

6 தமிழ்நாடு கமாண்டிங் அலுவலர் மேஜர் அசோக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், லெப்டினன்ட் ஈ.விவேக், தேசிய மாணவர் படையின் கோவை குரூப் கமாண்டிங் அலுவலர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள், ராணுவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img