fbpx
Homeதலையங்கம்ஸ்டாலினின் பெருந்தன்மையான முடிவு

ஸ்டாலினின் பெருந்தன்மையான முடிவு

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றது பெருந்தன்மையான முடிவு என அனைவரும் பாராட்டுகின்றனர்.

கட்சியினர் சிலருக்கு இது அதிருப்தியையும், வருத்தத்தையும் அளித்தாலும் பெரும்பான்மையினர் ஸ்டாலின் முடிவை பாராட்டுகின்றனர்.

மதுசூதனன் இறப்புக்கு அஞ்சலி செலுத்த போகக்கூடாது என்று திமுகவினர் தடுத்துள்ளனர்.

ஆனால் மிகவும் பெருந்தன்மை படைத்த முதல்வர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்த போகாமல் இருப்பது நாகரீம் அல்ல.

அவர்கள் பெருந்தன்மை இல்லாமல் இருக்கலாம். நாம் அப்படி இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு மதுசூதனன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இச்செயல் மு.க.ஸ்டாலினின் நாகரீகம், பெருந்தன்மையை காட்டுகிறது என அரசியல் தலைவர்கள் ஸ்டாலினை புகழ்ந்துள்ளனர்.

உண்மையிலேயே தற்கால அரசியலில் இச்செயல் மிகப்பெருந்தன்மையான செயல்.

படிக்க வேண்டும்

spot_img