fbpx
Homeதலையங்கம்வேதனை செய்தி

வேதனை செய்தி

இந்திய ஹாக்கி அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வந்த நெதர்லாந்து பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் அந்த பதவியிலிருந்து விலகுவதை அறிந்து விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், இந்திய அணியினருடன் இணைந்து செயல்படுவதை தவற விடுகிறேன்.

நான் எனது குடும்பத்தினரை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தவறவிட்டு இருக்கிறேன். தற்போது குடும்பத்தினரிடம் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

இந்திய ஹாக்கி அணியினருடனான அழகான பயணம் முடிந்து விட்டது. இந்திய ஹாக்கி வீராங்கனைகளின் செயல்பாடு பெருமை அளிக்கிறது.

வீராங்கனைகள் பதக்கம் வெல்லாவிட்டாலும் அதனை விட பெரிதாக இந்திய மக்களின் மனதை வென்று இருக்கிறார்கள் என்று ஜோர்ட் மர்ஜின் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img