fbpx
Homeபிற செய்திகள்விவோ எக்ஸ் 60 விலை குறைப்பு

விவோ எக்ஸ் 60 விலை குறைப்பு

உலக அளவில் புதுமையான ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்60 ஸ்மார்ட் போனிற்கான விலையை குறைத்து, புதிய விலையை அறிவித்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் முந்தைய விலை ரூ.37,990 ரூபாய்க்கு பதிலாக தற்போது 34,990 ரூபாய்க்கும், 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் 41,990 ரூபாய்க்கு பதிலாக தற்போது 39,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

தற்சமயம் குறைக்கப்பட்ட விலையுடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் உடன் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சலுகை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்கள் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் முன்னணி ஆன்லைன் இணைய தளங்களிலும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் கிடைக்கிறது.

இத்துடன் இதன் எக்ஸ்60, எக்ஸ்60 புரோ மற்றும் எக்ஸ்60 புரோ பிளஸ் ஆகிய 3 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் கவர்ச்சிகரமான நிதி திட்டங்களும் வழங்கப்படுகிறது.

5ஜி தொழில் நுட்பத்தில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8 சீரிஸ் இயங்கு தளத்தில் வெளி வந்திருக்கும் எக்ஸ்60 மற்றும் எக்ஸ்60 புரோ ஆகியவை குவால்காம் ஸ்நாப்டிராகன் 870 இயங்கு தளத்திலும், எக்ஸ்60 புரோ பிளஸ் குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 மூலம் இயங்குகிறது.

இந்த சலுகை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை அனைத்து ஆப்லைன்களிலும் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றிற்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக்கும், ஒருமுறை ஸ்கிரீன் மாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது.

இதன் பிரத்யேக இ-ஸ்டோரில் எச்டிஎப்சிவங்கி, ஐசிஐசிஐ வங்கியின் வழக்கமான கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கும், 12 மாத வட்டியில்லா தவணை மற்றும் ஒரு முறை ஸ்கிரீனை மாற்றும் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக கூடுதலாக 5 ரூபாயும், 12 மாதங்களுக்கு வட்டியில்லா தவணைக் கடன் சலுகையும் வழங்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img