உலக அளவில் மீண்டும் கொரோனா அதிகரித்திருக்கிறது. நம் நாட்டில் மராட்டியத்திலும், கேரளாவிலும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ள சூழலில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்றே கூடியிருக்கிறது.
ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுகளுக்கு திரும்பிகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருப்பது ஆறுதலான விஷயம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கும் நீட்டிக்கப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய-மாநில அரசுகள் தம்மால் இயன்ற அளவுக்கு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போதைக்கு கொரோனாவிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும் காத்து கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான்.
முகக்கவசம், சானிட்டைசர், சோப், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதிப்பு தடுப்புகளில் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் இருந்து நாமும், நம்முடைய குடும்பத்தினரும் கடைசி ஆயுதமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவது நம் அனைவருடைய கடமை.
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க வேறு வழி கிடையாது.



