முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கு 98.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும் காது, மூக்கு தொண்டை துறை தலைவர்களிடம் வழங்கினார்.



