எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதிலாக அந்த இடத்தில் தேர்ச்சி என அச்சிட்டு வழங்க அனுமதி கொடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21ம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2020-21ம் கல்வியாண்டில் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்குவது குறித்து கடந்த 8.5.2021 அன்று பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் கலந்து கொண்ட கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1 படித்த அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வர் பின்வரும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என சான்றளிக்கப்படுகிறது என்ற வாசகத்தை அச்சிட்டு ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான இடத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி என பதிவு செய்து சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்படுகிறது.



