fbpx
Homeபிற செய்திகள்கிராம சபைக் கூட்டம் நடத்த கமல்ஹாசன் வலியுறுத்தல் கோவை ஆட்சியரிடம் மனு

கிராம சபைக் கூட்டம் நடத்த கமல்ஹாசன் வலியுறுத்தல் கோவை ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் மீண்டும் கிராம சபைகள் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் ஆகஸ்டு 15ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மதத்திற்கு பின் கிராம சபைக் கூட்டமே நடத்தப்படவில்லை.

எனவே மீண்டும் அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும்.

மேலும் நிதி நிலை அறிக்கையில் கிராம சபைக் கூட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img