fbpx
Homeபிற செய்திகள்படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுடன் கோவை ஆட்சியர் கலந்தாய்வு- ஆளுமைத்திறனை மேம்படுத்திக் கொள்ள...

படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுடன் கோவை ஆட்சியர் கலந்தாய்வு- ஆளுமைத்திறனை மேம்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் (District Collector’s Internship Programme) நேற்று (நவ.21) கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் டாக் டர்.ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி பேசியதாவது:
மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் (District Collector’s Internship Programme) என்பது கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் / இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிருவாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படடு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியானது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்களும்,, நீண்டகால பயிற்சியானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6 மாதங்களும் வழங்கப்படும்.

படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சி

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியில் 25 மாணவர்களும், நீண்டகால பயிற்சியில் 6 மாணவர்களும் தேர்வு பெற்றனர்.
இன்றைய தினம் நடைபெற்ற கலந்தாய்வில் 28 மாணவர்கள் நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தங்களின் பணி குறித்தும் விளக்கவுள்ளனர்.

இந்த பயிற்சிகளை முறையாக பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஆளுமை திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியினை நிறைவு செய்பவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.

மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர் அலர்மேல்மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் டாக்டர் என்.பாலு, முதல்வர் விஜியா கென்னடி, அண்ணா பல்கலைக்கழக டீன் டாக்டர் எம்.ரத்தினசாமி, யுவ இந்தியா சேர்மன் டாக்டர் கே.ஏ.குரியாச்சன், ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜய் ராமசந்திரன் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img