fbpx
Homeபிற செய்திகள்நடமாடும் குடும்ப நல சேவை வாகனம்: உதகையில் ஆ.ராசா துவக்கிவைத்தார்

நடமாடும் குடும்ப நல சேவை வாகனம்: உதகையில் ஆ.ராசா துவக்கிவைத்தார்

உதகையில் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், நடமாடும் குடும்ப நல சேவை மற்றும் ஆலோசனை வாகனத்தினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நேற்று (ஜூலை 19) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மாற்றுத் திறனாளி நலத்துறை செயலர்/மாவட்ட கண்காணிப்பு அலு வலர் ஆனந்த் குமார், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2022 உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த 11-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில், நடமாடும் குடும்ப நல சேவை மற்றும் ஆலோசனை வாகன சேவையினை தொடங்கி வைத்தார்.

இன்றைய தினம், நீலகிரி மாவட்டத்தில் இந்த வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

குடும்ப நல திட்டம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவா னது. தமிழகத்தில் குடும்ப நலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் குடும்ப நலத்திட்டத்தை ஏற்று சிறுகுடும்ப நெறியினை பின்பற்றுவது குறித்து தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இவ்வாகன சேவையானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாகன சேவையானது நகராட்சி, பேருராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் உள்ள பொ துமக்களுக்கு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.பழனிசாமி, அரசு முன்னாள் கொறடா பா.மு.முபாரக், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன்(எ) மாதன், உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ஜெ.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img