கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு ஆலை விபத்துகள் அதிக ரித்து வருகின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படா தது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள். இந்த ஆலையின் உரிமம் காலாவதியாகி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட குருங்குடி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சிவகாசி பகுதியில் வெடிவிபத்தில் உயிரிழப்புகள் அடிக்கடி நடந்து வருகிறது.
இனி வரும் காலங்களிலாவது இத்தகைய பட்டாசு ஆலை விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் செய்ய வேண்டும்.
உரிய அனுமதியின்றி ஒரு பட்டாசு ஆலை கூட இயங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விதிமுறைகளை சரியாக ஆலை நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். சமரசத்துக்கு இடமின்றி பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழைத் தொழிலாளர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்!



