fbpx
Homeபிற செய்திகள்திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ துவக்கம்

திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ துவக்கம்

தமிழகத்தில் முதல்முறையாக ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Downtown), “ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்” (Rotaract Club of TransMom)) ஒன்றை துவக்கியுள்ளது.
இதில் தற்போது 16 திருநங்கைகள் இணைந்துள்ளனர்.
மாவட்ட கிளப் ஏற்பாட்டில் நடந்த கிளை துவக்க விழாவில் ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி கீர்த்தி விவேக், 2022-23 உதவி கவர்னர் சுமித் குமார் பிரசாத், டிரான்ஸ்மாம் ரோட்டராக்ட் கிளப்புக்கு சர்வதேச ரோட்டரி கிளப் அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்ட 2021-22 தலைவர் கேப்டன் பாலாஜி பாபு, அவரது துணை நின்ற 2022-23 தலைவர் சுந்தரேசன், 2021-22 செயலாளர் ஷியாம், 2022-23 செயலாளர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரோட்டரி மாவட்டம் இளையர் சேவை பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், “திருநங்கை தன்ஷிகா, கடின உழைப்பாளி. அவர், டிரான்ஸ்மாம் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் மற்றும் தலைவராகவும் உள்ளார். முதுநிலை பட்டம் பெற்ற அவர், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். டிரான்ஸ்மாம் பவுண்டேஷனில் அறங்காவலராக உள்ள அவர், திருநங்கைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகிறார்,” என்றார்.

திருநங்கை அனுஷ்யா, டிரான்ஸ்மாம் ரோட்டராக்ட் கிளப்பின் செயலாளராக உள்ளார். சமையல் பணியில் தொடங்கி, தன்னம்பிக்கை பெற்று, ஓட்டுநராகவும், தொழில் முனைவோராகவும் மாறியுள்ளார்.
திருநங்கை சங்கீதா வாடகை கார் ஓட்டி வருகிறார்.

ரோட்டரி மாவட்டம் 3201 கிளப்பில் 160 கிளப் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு கிளப்பும், புதிய திட்டங்களை டிரான்ஸ்மாம் கிளப்புடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளன. 2022-2023 ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர், “ஐ” என்பதை, ரெயின்போ விப்கியார் திட்டத்துடன் துவக்கி நடத்தி வருகிறார்.

டிரான்ஸ்மாம் பவுண்டேஷன், ரோட்டராக்ட் கிளப்புகள் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மளிகை பொருட்கள் அளித்தல், தொழில் மற்றும் கலை திறன் மேம்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றன. திருநங்கையர்களில் 50 உறுப்பினர்களுக்கு முதலுதவி பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img