fbpx
Homeபிற செய்திகள்சென்னை ஆழ்வார்பேட்டை, தி.நகர் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை ஆழ்வார்பேட்டை, தி.நகர் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நேற்று சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தினால் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற்றும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழைநீர் வெளியேற்றும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ராட்சத இயந்தி ரங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி மற்றும் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி மற்றும் அதனையொட்டியுள்ள இணைப்பு சாலைகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 100 குதிரைத்திறன் கொண்ட ராட்சத இயந்திரங்களை கொண்டு வந்து இந்த பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி ஊழியர்கள், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் ஊழியர்கள், அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை முதல்வர் ஆய்வு செய்தார்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். வருங்காலங்களில் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து மேலும் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

மழைநீர் வெளியேற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நேற்று ஒரேநாளில் அதிக அளவில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் இந்த வெள்ள பாதிப்புகள் மழைநீர் தேங்கியதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று இரவே மாநக ராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அடுத் தக்கட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீண்டும் ஆய்வுகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

ஆழ்வார்பேட்டையில் ஆய்வினை முடித்த பிறகு தியாகராயர் நகர் பகுதியில் மழைநீர் பாதிப்புகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img