fbpx
Homeபிற செய்திகள்புத்தாண்டு கொண்டாட்டம் : ஓட்டல்களில் மது விற்பனை செய்தால் நடவடிக்கை கோவை போலீஸ் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம் : ஓட்டல்களில் மது விற்பனை செய்தால் நடவடிக்கை கோவை போலீஸ் எச்சரிக்கை

புத்தாண்டை முன் னிட்டு கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என தாபா ஹோட்டல்களின் உரிமையாளர்களை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

தமிழகத்தில் 2022க்கான ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அனைவ ரும் புத்தாண்டை கொண் டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களில் புத் தாண்டை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர். இதில் சில ஹோட்டலில் மட்டுமே பார் வசதி இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டு நிகழ்ச்சிக்காக தமிழகத்திலுள்ள தாபா ஹோட்டல்களில் சட்டவி ரோதமாக புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப் பட்டது.

இந்தாண்டு இத்தகைய சட்டவிரோத சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள தாபா ஹோட்டலின் உரிமை யாளர்களை அழைத்து காவல் துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் சரவணம் பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தாபா ஹோட்டல் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றும், இது தொடர்பான புகார்கள் வரும் போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img