fbpx
Homeபிற செய்திகள்சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவ, மாணவிகள் 75 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவ, மாணவிகள் 75 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை

75 வது சுதந்திர தின விழாவை சாதனையோடு கொண்டாடும் விதமாக ,கோவை ஆர்.ஜி.ஏ. சிலம் பம் அகாடமி மற்றும் கிராமிய புதல்வன் அகாடமி சார்பாக 75 மாணவ,மாணவிகள் இணைந்து தொடர்ந்து 75 நிமிடங்கள் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி கோவை உடையாம்பாளையம் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

சிலம்பம் பயிற்சியாளர்கள் ஆறு முகம் மற்றும் ஹேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், ஐந்து வயது சிறுவர்,சிறுமியர் முதல் 13 வயது வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து கையில் சிலம்பத்தை லாவகமாக தொடர்ந்து 75 நிமிடங்கள் சுற்றி பீனிக்ஸ் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐ.நா.வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையர சன் சாதனை மாணவ,மாணவிக ளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

தமிழக பாரம்பரியத்தை பறை சாற்றும் சிலம்பம் விளையாட்டை 75 நிமிடங் கள் தொடர்ந்து செய்த மாணவ,மாணவிகளை அந்த பகுதி பொதுமக்கள் சாதனையாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img