பருவநிலை மாற்றம் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசே விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்கா யத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவைமாவட் ட தலைவர் சு.பழனிச்சாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், தீத்தி பாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி உள்ளிட்ட பகு திகளில் வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங் காயம் நடவு செய்வோம்.
இந்த காலகட்டத்தில் அதிக மழை பெய்தாலோ, பனி மற்றும் வெயில் அடித் தாலோ சின்ன வெங்காயம் விவசாயம் பாதிக்கப்படும்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சின்ன வெங்காயத் தின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்து சரிவை சந்தித்து வருகிறது. மேலும், கடந்த வாரம் மழை பெய்ததால் நடவு செய்து 45 நாட்களே ஆன சின்ன வெங்காயம் நோய் தாக்குதலுக்கு உள் ளாகி, பெருக்காமல் சிறிய அளவிலேயே நின்று விட்டது. இதனால் வெளிமார்க்கெட்டுக்கு இதனை விற்பனை செய்ய முடியாது.
ஆகவே அரசு தோட் டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச்செய்வதோடு, அரசே சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்யவும், ஏற் றுமதிக்கு அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



