தமிழ் இலக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சவீதா தமிழ் மன்றம், கடந்த சில வாரங்களாக கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.
சென்ற வாரம் யுத்த காண்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உத்திர காண்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
யுத்த காண்டம் இரா மன் பட்டாபிஷேகத்தோடு நிறைவுறுகிறது. இராமனின் ஆட்சி சிறப்பை எடுத்துக் கூறும் உத்திர காண்டம் ஒட்டக்கூத்தரால் இயற்றப் பட்டது. இராமனின் ஆட்சி காலத்தில் நாட்டு மக்களின் சொற்களைக் கருத்தில் கொண்டு இர £மன் மீண்டும் சீதையைக் காட்டிற்கு அனுப்புதல் அங்கே வால்மீகி ஆசிரமத்தில் இலவன் குசன் பிறத்தல் இராமனின் அசுவமேத யாகக் குதிரையை அவர்கள் தடுத்து நிறுத்துதல் இறுதியாக இலவன் குசனிடம் ஆட்சியை ஒப்படைத்து இராமன் தன் தம்பியரோடு வைகுண்டம் செல்லுதல் போன்ற கருத்துகள் இலக்கிய உரையாடலில் இடம் பெற்றன.
இராமன் சீதையை காட்டிற்கு அனுப்பியது முறையா? மற்றும் இராமன் சீதை இருவருக்கும் இடையே உள்ள அன்புணர்வு போன்றவற்றைப் பற்றி மாணவர்கள் ஆர்வத்தோடு விவாதித்தனர்.
சவீதா பொறியியல் பள்ளி மாணவர்களும் மற்றும் சவீதா கலை மற் றும் அறிவியல் கல்லூரி மாணவர்களோடு, சவீதா செவிலியர் கல்லூரி மாண வர்களும் இவ்வி லக்கிய உரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சவீதா பல்கலைக்கழக வேந்தர் மருத்துவர் ந.மா. வீரையனின் தமிழ் இலக்கிய.
ஆர்வமும் வழி காட்டுதலுமே இத்தகைய சிறப்பான நிகழ்வு தொடர்ந்து நடைபெறக் காரணமாகும்.



