fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நாளை முதல் 3 நாட்கள் ரியல் எஸ்டேட் கண்காட்சி- கிரெடாய் நடத்துகிறது

கோவையில் நாளை முதல் 3 நாட்கள் ரியல் எஸ்டேட் கண்காட்சி- கிரெடாய் நடத்துகிறது

கிரெடாய் கோவை சார்பில் ஃபேர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது.
இது குறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா துணை பொது மேலாளர் இன்பரசு ஆகியோர் கூறியதாவது:

கோவை கிரெடாய் சார்பில் 12-வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சி கொடிசியா வளாகத்தில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட ரெரா (ஸிணிஸிகி) அங்கீகாரம் பெற்ற திட்டங்களை காட்சிப்படுத்துகின்றனர்.

இக்கண்காட்சியில் 5 வங்கிகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் பங்கு கொள்கின்றனர். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள் மற்றும் முதி யோருக்கான இல்லங்கள் வரை இக்கண் காட்சியில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ள புராஜெக்டுகளும் புதிதாக அறிமு கப்படுத்தப்படும் புரா ஜெக்டுகளும் உள்ளன.

வீட்டிலிருந்தே ஐடி கம்பெனி பணியாளர்கள் பணி புரிவதால் அவர்கள் பெரிய அளவிலான வீடுகளை எதிர்பார்க்கின்றனர். சற்று தொலைவில்இருந்தாலும் மக்கள் அதிக போக்குவரத்து வசதி கொண்டுள்ள இடங்களை பெரிதும் விரும்புகின்றனர்

கட்டுமானத்தின் செலவு அதிகரித்திருந்தாலும் சொத்து வாங்குவதற்கான தேவை அதிகரித்து வருகி றது. பல முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் துறையில், குறிப்பாக சிறிய நகரங்களில் அதிக லாபம் உள்ளதால், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். மேற்படி காரணங்களால் நமது பகுதியில் ரியல் எஸ்டேட் துறை பெறும் வளர்ச்சி கண்டு வருகிறது.

கண்காட்சியானது வீடு வாங்க விருப்பம் உள்ள வர்களுக்கு தேவை யான தகவல்கள் முதல், வங்கிக் கடனும் ஆலோசனையும் ஒரே இடத்தில் அளித்து பலரின் கனவு இல்லத்தை நனவாக்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி இந்த கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img