fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இந்திய தர கருத்துக்கள் பற்றிய 4 நாட்கள் தேசிய மாநாடு வருகிற 27ம் தேதி...

கோவையில் இந்திய தர கருத்துக்கள் பற்றிய 4 நாட்கள் தேசிய மாநாடு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது

கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு அப்ளைடு ரிசர்ச் வளாகத்தில் இந்திய தர வட்டம் குவாலிட்டி சர்க்கிள் ஃபோரம் ஆப் இந்தியா சார்பில் தர கருத்துக்கள் பற்றிய 35-வது தேசிய மாநாடு வருகிற 27&ந்தேதி தொடங்கி 30ந் தேதி முடிய 4 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து கியூ.சி.எப்.ஐ நிர்வாக இயக்குநர் டி.கே.ஸ்ரீவஸ்தவா, துணைத்தலைவர் டாக்டர் மோகனசுந்தரம், சுப்பிரமணியன், யோகேஸ்வரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

குவாலிட்டி சர்க்கிள் போர்ம் ஆப் இந்தியா நாடு தழுவிய தரக் கருத்துக்களை ஊக்குவிப்பதற்காகவும், கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் தரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஏப்ரல் 1982ல் ஒத்த எண்ணம் கொண்ட கல்வியாளர்கள் மற்றும் பிற தர வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது.

கோவையில் நடைபெறும் இந்த மாநாடு மெய்நிகர் மற்றும் நேர்முக செயல்முறைகளைக் கொண்ட ஒரு கலப்பின மாநாடாகும். சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் தர தலைவர்கள், ஆய்வாளர்கள், மனிதவள வல்லுநர்கள், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க அமர்வு 27 டிசம்பர் அன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளது. உற்பத்தித் துறை, சேவைத்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

வெற்றி பெறும் அணிகளுக்கான மதிப்புரை அமர்வு மற்றும் பரிசு விநியோகம் 29 டிசம்பர் 2021 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img