fbpx
Homeபிற செய்திகள்பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் 309 குழந்தைகளுக்கு அரசு வழங்கிய ரூ.77.25 லட்சம் வைப்பு நிதி...

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் 309 குழந்தைகளுக்கு அரசு வழங்கிய ரூ.77.25 லட்சம் வைப்பு நிதி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நீலகிரி மாவட்ட மகளிர்!

பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2020-2021-ம் ஆண்டில், நீலகிரி மாவட்டத்தில் 309 குழந்தைகளுக்கு ரூ.77.25 இலட்சம் மதிப்பில் வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறார்.

வறுமை நிறைந்த குடும்பங்களில், பெண் குழந்தைகள் பொருளாதார சுமையாக தோன்றுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கல்வி கட்டாயமில்லை என கருதுவதோடு, அவர்களது கருத்துகளும் மதிக்கப்படுவதில்லை.

கல்வியறிவு பெற்ற அதிகாரம் நிரம்பிய பெண் குழந்தைகள் இத்தகைய சமூகத்தில் மனமாற் றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக பார்க்கப்படுகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது.

கல்வி, பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. நன்கு படித்தபெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங் கேற்கிறார்கள்.

சிசுக் கொலை ஒழிக்க
பெண் சிசுக்கொலையை ஒழித்திட வும், ஆண் குழந்தைகளை விரும்பும் போக்கை மட்டுப்படுத்திடவும், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்கப் படுத்திடவும் அரசு, பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்து வதன் மூலம் பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கிறது.

பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும் அரசால் அக்குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரியும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1992-ம்ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகை ‘தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்’ முதலீடு செய்யப்படுகிறது.

ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வைப்பு நிதியாக தரப் படும். இந்த வைப்புத் தொகையின் ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. பெண் குழந்தை 18 வயது நிறைவடைந்த தும், திரண்ட வட்டி விகிதத்து டன் கூடிய வைப்புத் தொகையின் முதிர்வு தொகையாக பயனாளிக்கு உயர்கல்வி பயில வழங்கப்படுகிறது.

திட்டத்தில் சேர தகுதிகள்
இத்திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை/ இரு பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருத்தல் கூடாது. எதிர் காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது.

பெற்றோரில் ஒருவருக்கு 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டி ருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பெற்றோர் தமிழ் நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தை இருப்பின், 3 வயதிற்குள்ளும் இரண்டு குழந்தை இருப்பின் இரண்டாவது குழந்தையின் 3 வயது முடிவதற்குள்ளும், திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் 01.09.2021 அன்று முதல்வரின் அறிவிப்பின்படி, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பை 35-லிருந்து 40 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத் தின் கீழ், 309 குழந்தைகளுக்கு ரூ.77.25 இலட்சம் மதிப்பில் வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்குழந்தைகளின் நலன் காக்க தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு, நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

விண்ணப்பித்தேன்: கிடைத்தது’
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன டைந்த பயனாளி கனிமொழி கூறியதாவது:

என் கணவர் பெயர் கோபு. நாங்கள் குன்னூர் கரன்சி எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும் அரசால் அக்குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரியும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை பற்றி தெரிந்து கொண்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் விண்ணப்பித்தேன்.

அதனடிப்படையில் எனது குழந்தைகளுக்கு வைப்பு தொகையின் ரசீது நகல் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்திடவும் மற்றும் அவர்களின் உரி மைகளை காத்திடவும் அரசால் என் குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரிந்த முதல்வருக்கு, எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘பெற்றேன் நகல்: கல்வி தர உதவும்’

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி நவீனா கூறியதாவது:
என் கணவர் பெயர் முருகேஷ். நாங்கள் கேத்தி உல்லாடா பகுதியில் வசித்து வருகிறோம்.

எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். அதன்மூலம் வரும் வருமானம் எங்களின் குடும்ப செலவிற்கு மட்டும் தான் போதுமானதாக இருக்கிறது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் மிகவும் துன்பப்பட்டு வந்தோம்.

அப்போது எனது உறவினர் ஒருவர் மூலம், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும் அரசால் அக்குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரியும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை பற்றி தெரிந்து கொண்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் விண்ணப்பித்தேன்.

அதனடிப்படையில் எனது குழந்தைகளுக்கு வைப்பு தொகை பத்திரம் நகல் ரசீது வழங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தையின் 18 வயது நிறை வடைந்தும், திரண்ட வட்டி விகிதத்துடன் கூடிய வைப்புத் தொகையின் முதிர்வு தொகை யாக என் குழந்தைகளுக்கு வழங்கப்படுவ தன் மூலம், கல்வி பெற உதவியாக இருக்கும்.

என் குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவி புரிந்த முதல்வருக்கு, எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு
நி.சையத்முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஓ.ர.மனோஜ்குமார்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img