கோவை 22-வது வார்டு விளாங்குறிச்சி ரோடு பால்காரர் தோட்டம் பகுதி அருகே கலைஞர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. திமுக கவுன்சிலர் கோவை பாபு தலைமை வகித்தார்.
இதில் போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ரத்தினவேலு, 22-வது வட்டச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர்.



