கோவை காந்தி பார்க் பகுதியில் நேற்று (ஆக.20) ராஜீவ் காந்தி பிறந்த தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், அவரது சிலைக்கு தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேற்கு மண்டல முன்னாள் தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநில செயலாளர் பழையூர் செல்வராஜ், ஊராட்சி கவுன்சிலர் சின்னராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் வெள்ளிங்கிரி, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.



