கேம்ஃபோர்ட் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப்காக, பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி இரண்டு நாள் நடந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள புத்தம் புதிய டர்ஃப் கால்பந்து மைதானம் திறந்து வைக்கப்பட்டு, இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மற்றும் நகரைச் சுற்றியுள்ள 17 பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
மாணவர்களுக்கு 14 வயது, 16 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவாகவும், மாணவிகளுக்கு 16 வயதுக்கு உட்பட்டோர் என ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தன.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 14 அணிகளும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 12 அணிகளும், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், டாக்டர் தசரதன் இன்டர்நேஷனல் பள்ளி முதலிடமும், அத்யானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன.
16 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் அத்யானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி முதலிடமும், கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி 2-வது இடமும், ஜிஆர்டி பப்ளிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தன.
16 வயதுக்குட்பட்ட மாணவிகள் ஜிஆர்டி பப்ளிக் பள்ளி முதலிடமும், கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி 2-வது இடமும், வேலம்மாள் போதி கேம்பஸ் 3-வது இடமும் பிடித்தன.
பள்ளி நிர்வாகமும், முதல்வரும் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும், போட்டிகளை சிறப்பாக நடத்தித் தந்த அனைவரையும் வாழ்த்தினர்.



