fbpx
Homeபிற செய்திகள்சூலூரில் கொப்பரை கொள்முதல் துவக்கம்

சூலூரில் கொப்பரை கொள்முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூர் வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை கொள்முதல் துவக்க விழா நடந்தது.
கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்
பதிவாளர் எஸ். பார்த்திபன் தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் சு.சதீஷ் குமார், சூலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், தலைவர் அப்புசாமி, கோவை வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் இராமசாமி, அரவிந்த், பொதுமேலாளர் (பொ) பேபி சரோஜா, செயலாளர்கள் நடேசன் சுப்பிரமணி, பால்ராஜ், ராகவன், அருண்குமார் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img