விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழக நிர்வாகத்திற்கான முதல் வகையான ஹைப்ரிட் பிளாக் செயின் தொழில்நுட்ப தீர்வை வழங்குவதற்காக ,இந்தியாவில் பிளாக் செயின் தளத்தில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான பெல்ப்ரிக்ஸ் பிடி நிறுவனம், சென்னை சிட்டி கால்பந்து கழகம், கேபிஆர் சொல்யூஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் என்எப்டி-க்கள், கிளப் டோக்கன்களை உள் ளடக்கிய விளையாட் டுகளுக்கான கலப்பின பிளாக் செயின் அடிப்ப டையிலான தீர்வையும், விளையாட்டின் அனைத்து பங்குதாரர்களையும் ஒற்றை பரவலாக்கப்பட்ட மேடையில் கொண்டு வருவதற்கு உதவும்.
பெல்ப்ரிக்ஸ்பிடி நிறுவனத்தின் நிறுவ னரும் தலைமை செயல் அதிகாரியுமான பிரவீன் குமார் கூறியதாவது: பிளாக்செயின் தீர்வு களின் உதவியுடன் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றமானது,
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு பல்வேறு வகையான வருவாய் வழிகளைத் தந்துள்ளது. இந்த தொழில் நுட்பமானது விளையாட்டு மற்றும் கிளப் நிர்வாகத்தின் இடையூறுகளுக்கு தீர்வு களை வழங்குவதோடு, வீரர்களின் செயல் திறன் மற்றும் கிளப்பின் செயல் பாடுகள் மேம்படும் மற்றும் வருவாயும் அதிகரிக்கும்.
பிளாக்செயின் தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்காக உலகளா விய விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு 2021-ம் ஆண்டில் மட்டும் ஒதுக்கீடு செய்த 22 பில்லியன் டாலரில், இந்தியாவிற்கு 796 மில்லியன் டாலர் ஒதுக்கீடு கிடைக்கும். கேபிஆர் சொல்யூ ஷன்ஸ் உடன் இணைந்து மேற்கொள்ளும் முதல் பிளாக்செயின் திட்டம் இதுவாகும்.
வரும் காலங்களில் அவர்க
ளுடன் இணைந்து அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் பல திட்டங்களை உருவாக்க உத்தேசித்துள்ளோம் என்றார்.
கேபிஆர் இன்போ சொல்யூஷன் தலைமை செயல் அதிகாரி கவுரிஷ் சுப்பிரமணியன் கூறியதா வது: விளையாட் டுத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
வரும் காலங்களில் பெல்ப்ரிக்ஸ் பிடி நிறுவனத்துடனான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சென்னை சிட்டி கால்பந்து கழக ரோகித் ரமேஷ் கூறுகையில், ஒருகிளப் என்ற வகையில், பல்வேறு பிரிவுகளில் எங்கள் வீரர்களுக்குசிறந்த மதிப்பீட்டை உருவாக் குவதற்கும், எதிர் காலத்தில் சிறந்த முறையில் எங்கள் கிளப்பிற்கு என்எப்டி மற்றும் ரசிகர்கள் டோக் கன்களின் மூலம் சிறந்த மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் இந்த கூட்டணி சிறந்த ஒன்றாக இருக்கும் என்றார்.



