fbpx
Homeபிற செய்திகள்காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி

காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி

விருதுநகரில் காமராஜரின் 120-வதுபிறந்ததினத்தை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் அண்ட் ஜேசிஐ, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், மிர்த்திகா பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி நேற்று (ஜூலை 14) முதல் வரும் 24-ம் தேதி வரை வாடியான் மாதா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

புத்தகக் கண்காட்சியினை தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இக் கண்காட்சியில் 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழகத்தின் அனைத்து முன்னணி பதிப்பகம் மற்றும் எழுத்தாளர் நூல்களும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன.

அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. கண்காட்சியில் கதை, கவிதை, வரலாறு சுயமுன்னேற்றம், ஆன்மீகம், IAS, IPS, NEET, டிஎன்பிஎஸ்சி மற்றும் குழந்தைகளுக்கான நூல்கள், ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு உள்ளன.

சமூகத்தை அறிவு சமூகமாக மாற்ற ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைக்க வேண்டும் ‌ என்ற இலட்சியத்தை முன் வைத்து கண்காட்சி நடத்தப்படுவதாக மக்கள் வாசிப்பு இயக்கம் நிறுவனர் வீரபாலன் தெரிவித்தார்.

கண்காட்சியில் தினமும் மாலை 5 மணிக்கு இலக்கிய உரை, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்நடைபெறும். பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டியும் நடைபெறுகிறது.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படும். எம்எல்ஏ ஏஆர்ஆர் சீனிவாசன் காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். சேர்மன் மாதவன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் வாசிப்பு இயக்கம் நிறுவனர் வீரபாலன் மற்றும் மக்கள் வாசிப்பு இயக்கம் அண்ட் JCI, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், மிர்த்திகா பதிப்பகம் செய்துள்ளன.

படிக்க வேண்டும்

spot_img