ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நெடுஞ்சாலை கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, ராமநாதபுரம் நா டாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துரா மலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



