fbpx
Homeபிற செய்திகள்ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த விவோ 5ஜி ஸ்மார்ட்போன்

ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த விவோ 5ஜி ஸ்மார்ட்போன்

புதுமையான ஸ்மா ர்ட் போன் பிராண்டாக திகழும் விவோ, 2021-ம் நிதி ஆண்டின் 2 -வது காலாண்டில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், 5ஜி ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ளது.

உலகளாவிய 5ஜி ஸ்மார்ட் போன் விற்பனையாளர் சந்தை பங்கு குறித்து ஸ்ட்ராடஜி அன லிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந் தியத்தில் ஏற்றுமதி செய்யப்படும் 5ஜி ஸ்மார்ட் போன் பிராண்ட்களில் விவோ முன்னிலை வகிக்கிறது.

விவோவின் முன்னணி தொழில் நுட்பம் மற்றும் உயர்தர கண்டுபிடிப்புகள் ஆகியவை இப்பிராந்தியத் தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இதுகுறித்து ஸ்ட்ராடஜி அனலிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம்:

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 5ஜி ஸ்மார்ட் போன் ஏற்றுமதியை 2020-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டுடன் 2021-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டை ஒப் பிடுகையில், விவோ நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்றுமதியில் முதல் 5 இடங்களை பிடி த்த நிறுவனங்கள் பற்றி இந்த ஆய்வில் பட்டியலிடப் பட்டுள்ளது.

முறையே ஏற்றுமதியில் கடந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டுடன் தற்போதைய நிதி ஆண்டின் 2-வது காலாண்டை ஒப்பிடுகையில் விவோ 13.3 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், எம்ஐ நிறுவனம் 10.5 சதவீதத் தில் இருந்து 19.3 சதவீ தமாகவும், ஓப்போ 12.3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாகவும், ஆப்பிள் 0 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாகவும், சாம்சங் 6.6 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறியுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், விவோ உலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் 5ஜி ஸ்மார்ட் போன் நிறுவனமாக மாறியது.

2021-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அதன் வேகத்தை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்ட தாக, ஸ்ட்ராடஜி அனலிட்டிக்ஸ் ஆய்வு கூறியுள்ளது.

5ஜி தரநிலைகள் மற்றும் முக்கிய தொ ழில் நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முன் னேற்றத்தை அறிமுகம் செய்வதன் மூலம், பல்வேறு வகையான 5ஜி மொபைல் போன்கள் மற்றும் மேம்படுத்தப்ப ட்ட 5ஜி அனுபவங்களை வழங்க விவோ உறுதி பூண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img