fbpx
Homeபிற செய்திகள்எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியலில் கீதாஞ்சலி, பிரவீன், பிரசன் ஜித்தன் முதலிடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியலில் கீதாஞ்சலி, பிரவீன், பிரசன் ஜித்தன் முதலிடம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந் தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத் துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது.

தர வரிசை பட்டியலில் நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி 710 மதிப் பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து, பிரவீன் 710 மதிப்பெண்களுடனும், பிரசன் ஜித்தன் 710 மதிப் பெண்களுடனும் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in என்ற இனையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப் புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

ஜனவரி 27-ல் சிறப்புப்பிரிவு, 28, 29-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜனவரி 30 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img