உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சியில் சேர, ஆண், பெண் இரு பாலாரிடம் இருந்தும் எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
உலகளவில் கம்ப்ரசர் தயாரிப்பில் முன்னணி வகித்து வருகிறது எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம். மாணவர்களை வளமான எதிர்காலத்திற்கு தயாராக்கும் வகையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மெசினிங், அசெம்பிளி, பெளண்டரி டெக்னாலஜி பயிற்சியில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 11, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை. வயது வரம்பு 19-க்குள். பயிற்சி காலம் 3 ஆண்டுகள்.
பயிற்சிக் காலம் முழுவதும் முதலாம் ஆண்டு மாதம் ரூ.7 ஆயிரம், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.8 ஆயிரம், மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.9 ஆயிரம் உதவித் தொகையாகவும் மற்றும் புத்தகங்கள், எழுது பொருட்கள், சீருடைகள், காலணிகள், தொழிற்கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் முழுக் கல்வி விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகலையும் இணைத்து வரும் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மனிதவள மேம்பாட்டுத் துறை, எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட், கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம் ரோடு, சிங்காரம்பாளையம் அஞ்சல், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்-642109 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு போன்: 0422 2587017, 2587000, 9790097334, 9790111845
மின் அஞ்சல் gobinath.ayyasamy@elgi.com / acpfrontoffice@elgi.com
இவ்வாறு எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



