ஈரோடு மாவட்டத்தில் 28 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 181 மாணவிகளுக்கு மலபார் குழுமம் சார்பாக சுமார் ரூ.15,10,000 காசோலை வழங்கப்பட்டது.
மலபார் கோல்டு டைமண்ட்ஸின் சிஎஸ்ஆர் (CSR -கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி, ஈரோடு மல பார் கோல்டு டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக ஈரோடு சக்தி துரைசாமி மஹாலில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு முதன்மைக் கல்வி அதிகாரி ராம கிருட் ணன், சிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அப்துல் ஹசன், எம்.சி.ஆர்.டெக்ஸ்டைல்ஸ் தலைவர் ராபின்சன், ஈரோடு மாநகர காங். தலைவர் ரவி, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்க £கவும் அவர்களின் கல்வி இன்மையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக ஈரோடு மாவட்டத்தில் 28 அரசு பள்ளி களை சேர்ந்த 181 மாணவிகளுக்கு சிஎஸ்ஆர் நிதியில் மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூ.15,10,000/- மதிப்பிலான காசோலையை மாணவிக ளுக்கு வழங்கினர்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், ஈரோடு கிளைத் தலைவர் முகமது அஸ்ரப், கிளை வர்த்தக மேலாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறு வனத்தின் வெற்றிகரமான வணிகத் திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும்.
தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது



