கறிக் கோழி பண்ணையாளர்கள் கறிக் கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 6.50 லிருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கறிக் கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கம் சார்பில் மாநில அளவிலான கூட்டம் பெருந்துறையில் நடை பெற்றது இக்கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:
பெரிய நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சு களையும் மருந்துகளையும் தீவனத்தையும் வழங் குகிறது 45 நாட்களுக்கு வளர்த்துக் கொடுத்தால் அதற்கு கூலி கிலோ ரூ.6.50 வழங்கப்படுகிறது
தற்போது உற்பத்தி செலவு அதிகம் உள்ளதால் இந்த கூலியை ரூபாய் 12 என உயர்த்தி தரவேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு மின்சாரம் சலுகை விலையில் வழங்க வேண்டும். காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண் டும்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அரசின் பரிசீலனையில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள் நல வாரியம் உருவாக்க வேண்டும்.
மாசு கட்டுப் பாட்டு வாரிய விதிமுறைகளில் இருந்து கறிக்கோழி பண்ணைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கறிக் கோழி பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக பல்லடம் பிராய்லர் கமிட்டியிடமும் அரசிடமும் மனு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சங்க மாநில செயலாளர், மாநில பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



