fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுக்குள் நிறைவடையும் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன்...

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள் 5 ஆண்டுக்குள் நிறைவடையும் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தில் 9 ஆயிரத்து 955 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சித் திட்டம், சரக்குதளம் 1,2,3,4-ஐ சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: கடலோர சமூக மேம்பாடு, துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி, துறைமுக இணைப்பு, விரிவாக்கம், புதிய துறைமுகம் மேம்பாடு, துறை முகத்தின் நவீனமயமாக்கல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்து தொடங்கப்பட்ட சாகர்மாலா திட்டத்தில் நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் துறைமுகங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் 2035 ஆம் ஆண்டிற்குள் செயல் படுத்த திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டுவருகின்றன.

அதில் தூத்துக்குடி துறை முகத்தில் ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பில் 11 திட்டங்கள் செயல்படுத்த திட்ட மிடப்பட்டதில் இதுவரை 860 கோடி ரூபாய் மதிப்பில் இத்துறைமுகத்தில் கப்பல் நுழை வாயிலை அகலப்படுத்துதல், வடக்கு சரக்கு தளம் மூன்று அமைத்தல், உள்நாட்டு சரக்குகளை கையாளும் கப்பல் தளத்தின் கொள்ளளவை அதிகரித்தல், நிலக்கரி தளம் ஒன்றை மேம் படுத்துதல், சரக்குப் பெட்டக முனையம் மேம்படுத்துதல் உள் ளிட்ட 13 திட்டப்பணிகள் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் துறைமுகத்தின் கொள்ளளவு 40 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது. தற்போது 790 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக மேம்பாட்டு திட்டம், பழைய துறைமுகத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.
கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக 965 ஏக்கர் இடத்தை துறைமுகம் ஒதுக்கி உள்ளது.

மேலும் சாகர்மாலா திட்டத் தின் கடல்சார் சமூக மேம்பாட்டு திட்டமும் செயல் படுத்தப்பட உள்ளது துறைமுகத்தின் கொள்ளளவை 114 மில்லியன் மெட்ரிக் டன் ஆக உயர்த்துவதற்காக 7500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம், 2455 கோடி ரூபாய் செலவில் சரக்குதளம் 1,2,3,4-ஐ சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன
இந்த பணிக்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் ஐந்தாண்டுக்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, துறைமுக ஆணைய துணை தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை பொறியாளர் கே.ரவிகுமார், போக் குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகர், துறைமுக துணை காப்பாளர் கேப்டன் பிரவின் குமார் சிங், நிதி ஆலோசகர் மற்றும் கணக்கு அலுவலர் ஏ.கே.சாகு, துணை தலைமை இயந்திர பொறியாளர் நிகர் ரஞ்ஜன் போயி,மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img