ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு 2019-2020-ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.17,25,570 மற்றும் கூட்டுறவு கல்விநிதி தொகை ரூ.11,49,714 ஆக மொத்தம் ரூ.28,74,284-க்கான வங்கி வரைவோலையினை, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் புதூர் கலைமணியிடம் வழங்கினார்.
உடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான மருத்துவர் சு.செந்தமிழ்செல்வி, துணைத் தலைவர் பி.கேசவமூர்த்தி, இயக்குநர்கள் இரா.மனோகரன், வி.எம்.லோகநாதன், துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் இரா.இராமநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் என்.வடிவேல் ஆகியோர்.



