fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை பயனடைந்தோர் 6107 பேர் எளியோரை பாதுகாக்கும் தெய்வம்...

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை பயனடைந்தோர் 6107 பேர் எளியோரை பாதுகாக்கும் தெய்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழாரம்

திருப்பூர் மாவட்டத்தில், ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில், இதுவரை 6107 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீடுதேடி வந்த மருந்துகளால் ஏழை, எளிய, வயதான நோயாளிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்வந்திரியாக தங்கள் வாழ்வில் ஒளியேற்றி பாதுகாப்பதாக புகழாரம் சூட்டினர்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”
நோய் என்ன, நோய்க்கான காரணம் என்ன, நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கு ஒப்ப, தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து சிறப்பாக பணியாற்றி நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

தொற்றா நோயாளிகளின் தன்மை அறிந்து அவர்களின் அலைச்சலையும், மன உளைச்சலை தவிர்க்கும் வண்ணம், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக, நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று, உயரிய நோக்கத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைமூலம் ,‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.

முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி வட்டம் தெக்கலூரில் செய்தித்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளையும் வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கிய அம்சங்கள்
‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில், 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக்களப் பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியின் குறிப்பைப் பதிவு செய்து தொடர்ந்து, கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் கடந்த 05-8-2021 முதல் 05-09-2021 வரை, துலுக்கமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மூலம் 1093 நோயாளிகளுக்கும், திருமுருகன் பூண்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மூலம் 1030 நோயாளிகளுக்கும், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 1640 நோயாளிகளுக்கும், நம்பியம் பாளையம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தின் மூலம் 1507 நோயாளிகளுக்கும் மற்றும் அவிநாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 837 நோயாளிகளுக்கும் என மொத்தம் 6107 நோயாளிகளுக்கு சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்த நோய் சிகிச்சை, இயன் முறை மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களின் தேவையைப் புரிந்து கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க திட்டமான ‘மக்களைத்தேடிமருத்துவம்’ திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரலாற்றுசிறப்புமிக்க 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற சிறப்புமிக்க திட்டங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சி க்காலத்தில் கொண்டுவரப்பட்டன.

தந்தையின் தொலைநோக்குப் பார்வையை அப்படி யே தன் செயல்களால் அனுதினமும் நிரூபித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த சான்றாகும்.

வீட்டிலே சிகிச்சை மனதிலே நிம்மதி
திருப்பூர் அவிநாசி வட்டம் தெக்கலூர் பகுதி மாரியம்மா கூறியதாவது:
எனக்கு 66 வயதாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை, இரத்தகொதிப்பு நோயால் அவதிப்படுகிறேன்.

இதற்காக தெக்கலூர் அரசு ஆரம்பசுகாதாரநி லையத்திற்கு சென்று வரிசையில்காத்திருந்து, சிகிச்சைக்கானமாதமாத்திரைகள்வாங்கிவருவதுவழக்கம். வயதுமூப்பின்காரணமாகமுன்புபோல்என்னால்போய்வரஇயலவில்லை. மிகவும்சிரமப்பட்டேன்.

தற்போது, ‘மக்களைத்தேடிமருத்துவம்’ என்றதிட்டத்தின்மூலம், வீடு தேடி வந்து எனது நோய்க்கான பரிசோதனையும் செய்து, இரண்டு மாதத்திற்கான மாத்திரைகளையும் வழங்குகின்றனர்.

இதனால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறேன். இத்தகைய சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய முதல்வர் ஐயாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெடுந்தூர பயணம் நின்றது
மருத்துவச் செலவு மறைந்தது
தெக்கலூர்காமநாயக்கன்பாளையம்பகுதிஆறுமுகம்கூறியதாவது:எனது மகளுக்கு பிறவியிலேயே இத்தகையகுறைபாடு இருந்தது.

அவளை சிறுவ யதுமுதல் இயன்முறை சிகிச்சைக்காக பல் வேறு தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளித்து வந்தேன். இதன்மூலம் மிகப்பெரிய பொருளாதார செலவு ஏற்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் மகளின் சிகிச்சைக்காக நெடுந்தூரம் பயணம்செய்ய வேண்டிய சூழலும் இருந்தது. ‘மக்களைத்தேடிமருத்துவம்’ என்றதிட்டத்தினால், இயன் முறை மருத்துவர்கள் எனது வீடு தேடி வந்து மகளுக்கு சிகிச்சை தருகிறார்கள்.

மருத்துவச்செலவு இல்லாமல் மகளுக்கு சிகிச்சை கிடைக்கிறது. எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களை பாதுகாக்க இத்திட்டத்தால், தமிழகத்தின் தன்வந்திரியாக முதல்வர்மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்என்றார்.

தொகுப்பு:
செ.கு. சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img