fbpx
Homeபிற செய்திகள்ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மினிகிசி மையம் சார்பில் ‘வெற்றிக்கான மந்திரம்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சிநடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி வரவேற்றார், கல்லூரி ஆலோசகரும், செயலருமான முனைவர் எஸ்.ராமச்சந்திரன் வாழ்த் துரை வழங்கினார்.

கேபிஆர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, வெற் றிக்கான மந்திரம் என்ற தலைப்பில் பேசும்போது, மாணவர்களின் கல்வி நலன் மற்றும் வெற்றியே, ஆசிரியர் களின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு புரியும் படி புதுமையான முறையில் கற் றல், கற்பித்தல் இருத்தல் சிறப்பு. ஒவ்வொரு வரின் வெற்றிக்கு அடிப்படை முடி வெடுக்கும் திறன் என்பதால், தனித்து இயங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் வளர்ச்சியே, ஆசிரியர்களின் வளர்ச்சி, ஆசிரியர்களின் வளர்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி என்பதைக் கருத் தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.

NAAC மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் கே.பிரதீபா நன்றி கூறினார். கல்லூரி புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், அனைத்துப் பேராசிரியர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img