யூத் & ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அசோசியே ஷன் ஆப் இந்தியா நடத்திய சீஷிறிகி இளையோர் தேசிய அளவிலான விளையாட் டுப் போட்டிகள் (குழு & தடகளம்) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
சாம்பியன்ஷிப் பட்டம்
இதில் தமிழக இளையோர் விளையாட்டு மேம்பாட்டு கழக அணி, தடகளம், வாலிபால், கேரம், கபடி, சிலம்பம், ஸ்கேட்டிங், செஸ், பாக்ஸிங் போட்டி யில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.
இதில் தமிழக அணியின் பயிற்சியா ளர்களாக சக்திவேல், தாயுமானவன், விஜய், புகழேந்தி, கீதா பங்கேற்றனர்.
இத்தகவலை தமிழக இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழக மாநில செயலாளர் நாகராஜ் தெரிவித்தார்.