fbpx
Homeபிற செய்திகள்ஜே.எஸ்.எஸ். மகா வித்யா பீடம் சார்பில் கலாச்சார பக்தி திருவிழா- ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஜே.எஸ்.எஸ். மகா வித்யா பீடம் சார்பில் கலாச்சார பக்தி திருவிழா- ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, அமெரிக்கா என உலகம் முழுவதும் சமூக பணியுடன் கல்விப்பணி கலாசாரப்பணியை ஆற்றிவரும் ஜே.எஸ்.எஸ். மகாவித்ய பீடத்தின் தலைமை குருவான சிவயோகி ஆதி ஜெகத்குரு சிவராத்திரி மகா சுவாமிகளின் தேர்த்திருவிழா மைசூர் அருகேயுள்ள சுத்தூரில் ஒருவார காலம் மிக சிறப்பாக நடைபெறும்.

இதில் பல்வேறு கலாச் சார நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், நாடகம், தெருக்கூத்து, தீ மிதித்தல், அன்னாபிஷேகம், லட்ச விளக்கு பூஜை, தெப்ப திருவிழா என மகாஸ்வா மிகளின் தேர்த்திருவிழா களைகட்டும்.

கர்நாடகா மற்றும் நீலகிரி பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் சுப வைபவமான இத்திரு விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அறுசுவை உணவு மூன்று வேளையும் வழங்கப்படுகிறது.

மெகா திருமணம்

இதனையொட்டி நடக்கும் மெகா திருமணம் அனைவரையும் கவரும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகளின் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அனைத்து தம்பதிகளுக்கும் தங்கத்தாலி, பட்டுபுடவை, பட்டுவேட்டி மற்றும் பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற் றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் கலாச் சாரத்தை விளக்கும் அனைத்து மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சுத்தூர் திருத்தலத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேரை நோக்கி வாழைப்பழங்களை வீசி தங்கள் நேர்த் திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றினர்.
இந்த சுத்தூர் விழாவில் கலந்து கொண்டும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சுத்தூர் ஸ்ரீ மடம் சிறப்பாக செய்திருந்தது.

இதில் ஊட்டியில் செயல்படும் ஜே.எஸ்.எஸ். கல்லூரியின் அலுவலர்கள், முதல்வர் டாக்டர் தனபால் மற்றும் முதன்மை அலுவலர் பசவண்ணா தலைமையில் தன்னார்வ பணிகளை சிறப்பாக செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img