Homeபிற செய்திகள்பெண்ணாடத்தில் மான் வேட்டையாடிய வாலிபர் கைது - நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

பெண்ணாடத்தில் மான் வேட்டையாடிய வாலிபர் கைது – நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

பெண்ணாடத்தில் மான் வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்ணாடம் நரிக்குறவர் காலனி பகுதியில் ஒருவர் மானை வேட்டை யாடி அதன் இறைச்சியை வெட்டிக் கொண்டிருப்பதாக பெண் ணாடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் பாக்யராஜ் மற்றும் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலை மையில் வனவர்கள் சஞ்சீவி, சிவக்குமார், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு மான் இறைச்சியை கத்தியால் வெட் டிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் விருத்தாசலம் வடக்கு பெரி யார் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பதும், பெண் ணாடம் நரிக்குறவர் காலனியில் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்த அவர் நேற்று வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சி வனப்பகுதிக்குள் புகுந்து நாட்டுத்துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் அதனை பெண்ணாடத்துக்கு கொண்டு வந்து மானின் இறைச்சியை வெட்டி விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. இதை யடுத்து சுரேசை வனத் துறை யினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் 20 கிலோ மான் இறைச்சி ஆகிய வற்றையும் பறிமுதல் செய்த னர். இந்த சம்பவம் பெண் ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img