fbpx
Homeபிற செய்திகள்கற்றலில் முன்னேற்றத்தைக் காட்டும் ‘எக்ஸ்ஸீட்’ மாணவர்கள்

கற்றலில் முன்னேற்றத்தைக் காட்டும் ‘எக்ஸ்ஸீட்’ மாணவர்கள்

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில வாரியங்கள் மற்றும் சர்வதேச பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வாரியங்களுக்குமான நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறையான சிங்கப்பூர் அடிப்படையிலானது எக்ஸ்ஸீட் (XSEED) என்பதாகும்.

பள்ளி செல்லும் குழந்தைகள், பெரும் பரவலாக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்புகளால் ஏற்பட்ட கல்வி இடைவெளியில் இருந்து இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் மாணவர்கள்.

இந்த பெருத்த கற்றல் நெருக்கடியிலிருந்து மாணவர்கள் அதிக தகவலறிந்த, நம்பிக்கை மிகுந்த மற்றும் அனைத்து வகையிலும் முன்னேற்றமடைந்த தனிநபர்களாக வெளிவர XSEED உதவுகிறது.

XSEED இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நர்சரி முதல் வகுப்பு 8 வரையிலான 2 மில்லியன் மாணவர்களுக்கு சேவை செய்துள்ளது.

XSEED earnometer Skills Test 2022-ன் சமீபத்திய கண்டுபிடிப்பு- இந்தியாவில் பள்ளி மாணவர்களால் எடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான திறன் சார்ந்த தேர்வுகளில் ஒன்று.

XSEED திட்டத்தைக் கற்கும் மாணவர்கள், கடந்த ஆண்டை விட ஒட்டுமொத்த மதிப்பெண்களில் 31%க்கும் அதிகமாக பெற்று மாணவர் முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க பிந்தைய கோவிட் கற்றல் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர்.

XSEED குழந்தைகள் கடந்த ஆண்டை விட ஆங்கிலத்தில் 30%, கணிதத்தில் 26% மற்றும் அறிவியலில் 39% முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கோவிட்

“தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி XSEED கல்வியை சிறப்பித்தது என்று சொல்லும் இந்த முடிவுகளால் ஊக்கமடைந்து மகிழ்ச்சியடைகிறோம். கோவிட் காரணமாக நிகழ்ந்த இந்த கற்றல் இழப்பைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் இந்த முடிவுகள் குறைந்தபட்சம் XSEED மாணவர்களுக்காவது மீட்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது” என்று XSEED கல்வி நிறுவனர், ஹார்வர்ட் முன்னாள் மாணவர் மற்றும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளர் டாக்டர் ஹோவர்ட் கார்ட்னரின் முன்னாள் மாணவர் ஆஷிஷ் ராஜ்பால் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img